தேசிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார் + "||" + Modi has admitted that the robbery at the Rafael Air Force Agreement: Rahul Gandhi

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை மோடி சுப்ரீம் கோர்ட்டில் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

புதுடெல்லி,

ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016–ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் எனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி மத்திய அரசு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விலைப்பட்டியலை தனியாக தாக்கல் செய்தது. ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்திய விமானப்படையை கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் மூலம் தொழில் அதிபர் அம்பானியின் சட்டை பாக்கெட்டுக்குள் ரூ.30 ஆயிரம் கோடி திணிக்கப்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், சத்தீஷ்கார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:–

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தலையணைக்குள் இருந்த பணம் வெளியே வந்ததாக மோடி கூறினார். அவர் சொன்னது சரிதான். ஆனால் யாருடைய பணம் பறிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அது ஏழை மக்களின் பணம். அவர்கள்தான் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் வங்கிகளின் முன்பாக கால்கடுக்க காத்துக் கிடந்தனர். எந்த கோடீசுவரராவது இதுபோல் நீண்ட வரிசையில் நின்றார்களா?... கோட்டு, சூட்டு அணிந்தவர்கள் யாரையாவது நீண்ட வரிசையில் பார்க்க முடிந்ததா?

இந்தியாவின் பிரதமர் கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உதவினார். அவர் ஏழைகளின் பணத்தை பறித்துக் கொண்டார். அதனால் பணக்காரர்கள் மட்டும்தான் பலன் அடைந்தனர்.

சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமான ஒப்பந்தம் : சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
2. ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்தவா? தொழில் அதிபர் பயன் அடையவா? மோடிக்கு சிவசேனா கேள்வி
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்த போடப்பட்டதா? அல்லது தொழில் அதிபர் பலன் அடையவா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
3. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
4. ‘ரபேல்’ விவகாரத்தில் மற்றொரு அவமானம் அம்பலம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருப்பதால், மற்றொரு அவமானம் அம்பலமாகி விட்டதாக ராகுல் காந்தி கூறினார்.
5. ரபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதால்தான் அலோக் வர்மா நீக்கம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதால்தான் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.