சாமியார் மகாராஜ் மீதுள்ள கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி


சாமியார் மகாராஜ் மீதுள்ள கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Nov 2018 9:50 AM GMT (Updated: 14 Nov 2018 9:50 AM GMT)

சாமியார் மகாராஜ் மீதுள்ள கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு எதிரான மறு ஆய்வு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

சாமியார் மகாராஜ் தன்னை கற்பழித்து விட்டார் என குற்றச்சாட்டு கூறி பெண் ஒருவர் கடந்த ஜூன் 7ந்தேதி புகார் அளித்துள்ளார்.  இதன்மீது ஜூன் 11ந்தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜூன் 22ந்தேதி குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இந்த வழக்கில் சாமியார் மகாராஜ் தவிர்த்து அவரது 3 சகோதரர்கள் மற்றும் பெண் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என குற்றச்சாட்டு கூறிய பெண் அளித்த மனுவின் மீது டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 3ந்தேதி விசாரணை மேற்கொண்டது.

அதன் முடிவில் வழக்கினை சி.பி.ஐ.யிடம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  தொடர்ந்து நீதிமன்றம், போலீசார் மேற்கொண்ட விசாரணையானது தெளிவற்ற நிலையில் உள்ளது என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கில் புகார் அளித்தவரின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் ஒருவர் முன் பதிவு செய்யப்பட்ட பின்பும் குற்றவாளியை பிரிவு 164ன் கீழ் போலீசார் கைது செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி சாமியார் மகாராஜ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதன் மீது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story