காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கருத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு


காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கருத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு
x
தினத்தந்தி 15 Nov 2018 7:55 AM GMT (Updated: 15 Nov 2018 7:55 AM GMT)

காஷ்மீர் மாநிலம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.

ராய்ப்பூர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி  லண்டனில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதனால்  நான்கு மாகாணங்களைக் கூட கையாள முடியவில்லை. "காஷ்மீரை இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்" என கூறி இருந்தார்.

காஷ்மீர் மாநிலம் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார். 

இந்தக் கருத்தை வரவேற்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கூறுவது சரி தான் என்று தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story