பிரச்சினைகள் தீர ராம் என பொதுமக்கள் பெயரை மாற்றி கொள்ள வேண்டுமா? யோகிக்கு ஹர்தீக் கேள்வி


பிரச்சினைகள் தீர ராம் என பொதுமக்கள் பெயரை மாற்றி கொள்ள வேண்டுமா? யோகிக்கு ஹர்தீக் கேள்வி
x
தினத்தந்தி 15 Nov 2018 11:52 AM GMT (Updated: 15 Nov 2018 11:52 AM GMT)

பெயர் மாற்றம் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமெனில் பொதுமக்கள் தங்களது பெயரை ராம் என மாற்றிக் கொள்ளலாம் என ஹர்தீக் பட்டேல் கூறியுள்ளார்.

சம்பல்,

உத்தரபிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள பைசாபாத் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயர்கள் முறையே அயோத்தியா மற்றும் பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கல்கி மகோத்சவம் என்ற நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ஹர்தீக் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பெயர் மாற்றம் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமெனில் நாட்டின் அனைத்து மக்களும் தங்களது பெயரை ராம் என வைத்து கொள்ளலாம் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, வேலைவாய்ப்பின்மை பரவி உள்ளது.  விவசாயிகள் மன உளைச்சலில் உள்ளனர்.  ஆனால் அவர்கள் (உத்தர பிரதேச அரசு) பெயர்களை மாற்றுவதில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர் என கூறியுள்ளார்.

சி.பி.ஐ. விவகாரம், ரபேல் ஒப்பந்தம் மற்றும் பொருளாதார மந்தம் ஆகியவற்றில் இருந்து பொதுமக்களின் கவனம் திரும்பும் வகையில் மத்தியில் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பாரதீய ஜனதா அரசானது ராமர் கோவில் விவகாரத்தினை பேசி வருகிறது என்றும் அவர் கூறினார்.

Next Story