தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் + "||" + Spoke to CM Shri K Palaniswami regarding the situation in the cyclone affected areas of Tamil Nadu says Rajnath singh

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத்சிங் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டுவிட்டரில் இது தொடர்பாக  கூறியிருப்பதாவது:- “ 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலவரம் பற்றி அறிய மாநில முதல்வர் கே பழனிசாமியுடன் பேசினேன். புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தேன். நிலவரத்தை கண்காணிக்க வேண்டும் என்று தேவையான அனைத்து உதவிகளையும் நிர்வாகங்களுக்கு செய்யுமாறு உள்துறை செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.