ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்; 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி


ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்; 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 17 Nov 2018 11:13 AM GMT (Updated: 17 Nov 2018 11:13 AM GMT)

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு எதிராக முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெறுகிறது.  இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த வியாழ கிழமை இரவு வெளியிட்டது.

தொடர்ந்து 2வது பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டார்.

இதில், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங்கை, ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.

அவர் ஜல்ராபதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.  பா.ஜ.க.வின் ஷியோ தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மன்வேந்திரா சிங், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த செப்டம்பரில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த தேர்தலில், அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் சி.பி. ஜோஷி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.


Next Story