கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம்; நிலைகுலைந்த மின்சார சேவை


கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம்; நிலைகுலைந்த மின்சார சேவை
x
தினத்தந்தி 18 Nov 2018 11:28 AM GMT (Updated: 18 Nov 2018 11:28 AM GMT)

கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம் அடைந்துள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


 நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.  சில மின்கம்பங்கள் காற்றின் வேகத்தில் தூள், தூளானது. புயலால் மின்சார சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துரிதமான முறையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம் அடைந்துள்ளது. கஜா புயலால் 4,239 கி.மீ. அளவுக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 8,216 மின் பணியாளர்களும் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 5,413 பணியாளர்களும் என மொத்தம் 13,619 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைக்கேற்ப மேலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவடையும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story