பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு
x
தினத்தந்தி 19 Nov 2018 1:35 AM GMT (Updated: 19 Nov 2018 1:35 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.6.64 குறைந்துள்ளது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று,  நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.79.46-க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 19 காசுகள் குறைந்து 75.44க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை 6.64-ம், டீசல் விலை 4.60-ம் குறைந்துள்ளது. 


Next Story