டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை


டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 19 Nov 2018 2:05 AM GMT (Updated: 19 Nov 2018 2:05 AM GMT)

டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி, 

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலை உலக வங்கி தயாரித்து அளிக்கிறது. கடந்த மாதம் வெளியான இந்த பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் கனவாக அமைந்துள்ளது.

இந்த கனவை நனவாக்குவதற்காக மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்களும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தின்போது, நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்தவும், சீர்திருத்தவும் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

Next Story