தேசிய செய்திகள்

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம் + "||" + BJP, RSS protest outside Kerala CM's house against detention of Sabarimala devotees

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம்

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம்
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 

வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய சுரேந்திரன், போலீசார் தன்னைத் தாக்கியதாகவும், குடிநீர், உணவு, மருந்து எதையும் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, போலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டுவதாக நேற்று இரவு சன்னிதானம் பகுதியில் தீடிர் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறியதாக பக்தர்களை சில தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் கெடுபிடிகளை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக  யுவ மோர்ச்சா மாநில தலைவர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2. ”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு
நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
3. தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்தனர் - கேரள மந்திரியின் தகவலால் குழப்பம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2–ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.
4. ”அகிலேஷ் யாதவ் தான் அடுத்த பிரதமர்” உ.பி.யில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் பேனர்கள்
அகிலேஷ் யாதவ் தான் அடுத்த பிரதமர் என்று உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
5. 65 நாட்கள் பூஜைக்குப்பின் சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது
சபரிமலையில் சுமார் 65 நாட்கள் பூஜைக்குப்பின் நேற்று நடை அடைக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...