தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல் + "||" + Implementation of the Supreme Court verdict Request time The petition filed by Thiruvithankur Devasam Board

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என செப்டம்பர் 28ஆம் நாள் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பளித்தது. இதையடுத்துக் கோவிலுக்குப் புறப்பட்ட பெண்கள் பலர் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். அதேநேரத்தில் தீர்ப்பைச் செயல்படுத்துவதை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாலை 7மணிக்கு மேல் கோவிலுக்குச் செல்லக் கூடாது எனப் பக்தர்களைக் காவல்துறையினர் தடுப்பதால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபாடு குறித்த தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடுதல் காலக்கெடு கேட்டுத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கோவிலில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் - மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.