ஆர்.எஸ்.எஸ். ஆள்சேர்க்க உதவுகிறீர்கள்! பினராயி விஜயன் அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்


ஆர்.எஸ்.எஸ். ஆள்சேர்க்க உதவுகிறீர்கள்! பினராயி விஜயன் அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
x
தினத்தந்தி 19 Nov 2018 12:31 PM GMT (Updated: 19 Nov 2018 12:31 PM GMT)

சபரிமலை சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கேரள அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.


கொச்சி,

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸ் அறிவித்துள்ளது. 

நேற்று சபரிமலை சன்னிதானத்தில் இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸ் கூறியதால் அசாதாரண போக்கு நிலவியது. இரவு நேரத்தில் மலையைவிட்டு இறங்க வாய்ப்பு கிடையாது என பக்தர்கள் கூறியதும் போலீஸ் கட்டாயப்படுத்தியுள்ளது. இருதரப்பு இடையிலான வாக்குவாதாம் முற்றியது. இதனையடுத்து போலீஸ் சிலரை வலுக்கட்டயமாக இழே இறக்க முயற்சி செய்தது. இதனையடுத்து மோதல் முற்றவும் 70 பக்தர்களை போலீஸ் கைது செய்தது. 

இச்சம்பவத்திற்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராட்டம் மேற்கொண்டது. அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று கேரளா அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் கேள்வி

சபரிமலை சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கேரள அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

அய்யப்ப பக்தர்கள் அனைவரையும் சங்பரிவார் இயக்கத்தினர் என முத்திரைக்குத்த அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இயக்கத்திற்கு ஆள்சேர்க்க உதவி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

“போலீசின் கைகள் உயர்ந்துள்ளது. ஓய்வெடுக்கும் பந்தல் பகுதியில் நின்ற அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரச்சனையை ஏற்படுத்த வந்த சங்பரிவார் உறுப்பினர்கள் கிடையாது. இப்போது கேரளா ஹிட்லர் ஆட்சியின் கீழ் உள்ளது?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று வரும் போராட்டக்காரர்களுக்கு எதிராக மட்டும்தான் அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையான பக்தர்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story