பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைவு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைவு
x
தினத்தந்தி 20 Nov 2018 12:46 AM GMT (Updated: 20 Nov 2018 4:12 AM GMT)

பெட்ரோல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. 

அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.  ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று,  நேற்றைய விலையில் இருந்து 15  காசுகள் குறைந்து ரூ.79.31-க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 13 காசுகள் குறைந்து 75.31-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை 6.79-ம், டீசல் விலை 4.73-ம் குறைந்துள்ளது. 


Next Story