கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் - கேரளா அரசு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் - கேரளா அரசு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:11 AM GMT (Updated: 20 Nov 2018 11:11 AM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.




‘கஜா’ புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. அங்கு மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் அலுவலக டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர் உணவுப்பொருட்கள், புதிய ஆடைகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மீட்புப் பணிகளில் கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story