தேசிய செய்திகள்

ஊழலை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தினை பயன்படுத்தினேன்; பிரதமர் மோடி + "||" + Demonetisation "bitter medicine" to treat corruption: Modi

ஊழலை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தினை பயன்படுத்தினேன்; பிரதமர் மோடி

ஊழலை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தினை பயன்படுத்தினேன்; பிரதமர் மோடி
நாட்டில் ஆழமுடன் வேரூன்றிய ஊழலுக்கு முறையான சிகிச்சை அளிக்கவே பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தினை பயன்படுத்தினேன் என பிரதமர் மோடி கூறினார்.
ஜபுவா,

மத்திய பிரதேசத்தில் வருகிற 28ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில்,  பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம்.

நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன்.  தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர்.  அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர்.  இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

மத்திய பிரதேச விவசாயிகள் காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறினார்.  அது போலியானது.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது.  ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை சிறைக்கு அனுப்ப தயாராகி கொண்டு இருக்கிறது.

எனது அரசு விவசாயிகளின் வருவாயை வருகிற 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்படைய செய்ய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு எதிரானது.  தனது அரசு 14 கோடி மக்களுக்கு இதுவரை கடன்களை அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... -மோடியை கிண்டல் செய்த கெஜ்ரிவால்
உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... என பிரதமர் மோடியை கெஜ்ரிவால் கிண்டல் செய்துள்ளார்.
2. சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு
பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு அச்சப்படுவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
3. மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு
மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. மோடி அரசு வாக்குறுதியை காப்பாற்றவில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றவில்லை என்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா குற்றம் சாட்டினார்.
5. 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மசூத் அசாரை விடுதலை செய்தது யாரென்று புல்வாமா தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.