தேசிய செய்திகள்

கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 12 பேர் காயம் + "||" + 12 injured in clash after man's chickens enter neighbour's house

கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 12 பேர் காயம்

கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 12 பேர் காயம்
கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் போஜாஹரி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷேஷாத்.  இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் மெஹ்ராசுதீன்.

இந்த நிலையில், மெஹ்ராசுதீன் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.  அவரது கோழி குஞ்சுகள் ஷேஷாத்தின் வீட்டிற்குள் இரை தேடி சென்று உள்ளது.

இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாக்குவாதம் முற்றி வன்முறையாக வெடித்தது.  இதனை அடுத்து இரு தரப்பினரும் ஆயுதங்கள் மற்றும் கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வேறு எந்த சம்பவமும் நடந்து விடாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் பரிதாப சாவு - சேந்தமங்கலம் அருகே சோகம்
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மினி வேன் மீது மோதியதில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
2. பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்; 5 பேர் படுகாயம்
பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் இறந்தனர்.
4. வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை அருகே வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்தஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
5. திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மோதல் சோதனையின்றி மலேசியா பறந்த 130 பயணிகள்
திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் சோதனையின்றி 130 பயணிகள் மலேசியா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.