“முஸ்லீம் வாக்கு வங்கி” காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீடியோவால் சர்ச்சை


“முஸ்லீம் வாக்கு வங்கி” காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீடியோவால் சர்ச்சை
x
தினத்தந்தி 21 Nov 2018 12:59 PM GMT (Updated: 21 Nov 2018 12:59 PM GMT)

முஸ்லீம் வாக்கு வங்கி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேச்சு அடங்கிய வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. விவசாயிகள் விவகாரங்களால் விமர்சனங்களை பா.ஜனதா எதிர்க்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜனதா போட்டி பிரசாரம் மேற்கொள்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வீடியோவின் உண்மைத்தன்மை தெளிவாகவில்லை.

முஸ்லீம்களின் வாக்கு வங்கியை 90% கைப்பற்ற வேண்டும் என்று கமல்நாத் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

முஸ்லீம்களின் அதிகமான வாக்கை பெறாவிட்டால் காங்கிரசுக்கு பின்னடைவாக அமையும் என்று அவர் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. 

காங்கிரஸ் மத ரீதியில் பிரசாரம் மேற்கொள்கிறது என்பதற்கு வீடியோவே ஆதாரம் என பா.ஜனதா கூறியுள்ளது.


Next Story