சொத்து மதிப்பு : சந்திரபாபு நாயுடுக்கு ரூ. 3 கோடி; பேரனுக்கு ரூ. 18 கோடி


சொத்து மதிப்பு : சந்திரபாபு நாயுடுக்கு ரூ. 3 கோடி; பேரனுக்கு ரூ. 18 கோடி
x
தினத்தந்தி 22 Nov 2018 8:13 AM GMT (Updated: 22 Nov 2018 8:13 AM GMT)

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த எட்டு ஆண்டுகளாக தானாக முன் வந்து ஆண்டுதோறும் தனது குடும்ப சொத்து மதிப்பு  விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பு விவரத்தை சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் நேற்று  வெளியிட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு கடந்த ஆண்டிலிருந்து ரூ.12.5 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடி. இந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.81.63 கோடி. இதில் சந்திரபாபு நாயுடு சொத்து ரூ.2.53 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடியில் இருந்து ரூ.31 கோடியாக அதிகரித்துள்ளது. மகன் நாரா லோகோஷின் சொத்து ரூ.15.21 கோடியில் இருந்து ரூ.21.40 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது 3 வயது மகன் தீவன்ஷ் சொத்து ரூ.11.54 கோடியில் இருந்து ரூ.18.71 கோடியாக அதிகரித்துள்ளது. பேரன் சொத்து, தாத்தா சொத்தை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story