தேசிய செய்திகள்

பாபர் மசூதியை 17 நிமிடங்களில் இடித்தோம், சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? அரசுக்கு சிவசேனா எச்சரிக்கை + "||" + We Razed Babri In 17 Minutes, How long For A Law? Senas Sanjay Raut

பாபர் மசூதியை 17 நிமிடங்களில் இடித்தோம், சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? அரசுக்கு சிவசேனா எச்சரிக்கை

பாபர் மசூதியை 17 நிமிடங்களில் இடித்தோம், சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? அரசுக்கு சிவசேனா எச்சரிக்கை
பாபர் மசூதியை 17 நிமிடங்களில் இடித்தோம், இப்போது ராமர் கோவிலை கட்ட சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? என்று அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை,

சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமர் கோவிலை கட்ட அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்து அமைப்புக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. கோவில் கட்டும் வகையில் அரசு அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.
 
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். “பாபர் மசூதியை வெறும் 17 நிமிடங்களில் தரைமட்டமாக்கி விட்டோம். ஆனால் சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்? கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத்தில் சுதந்திரமாக சுற்ற முடியாது,” என எச்சரித்துள்ளார். கோவில் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. விஷ்வ இந்து பரிஷத்தும் கோவிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவசரச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.