தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: 6 தீவிரவாதிகள் சுட்டு கொலை; ராணுவ வீரர் மரணம் + "||" + Six militants, soldier killed in J-K encounter

காஷ்மீர் என்கவுண்டர்: 6 தீவிரவாதிகள் சுட்டு கொலை; ராணுவ வீரர் மரணம்

காஷ்மீர் என்கவுண்டர்:  6 தீவிரவாதிகள் சுட்டு கொலை; ராணுவ வீரர் மரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கப்ரான் படாகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அந்த பகுதியை தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதன்பின்பு தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.  பல மணிநேரம் நடந்த இந்த மோதலில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவரும் மரணம் அடைந்துள்ளார்.  கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.  அந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தீவிரவாதிகளுடனான என்கவுண்டர் முடிவுக்கு வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது
காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.
2. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை, 5 வீரர்கள் பலி
காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல் வெளிவந்து உள்ளது.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல்; 2 ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.