பணமதிப்பிழப்பில் பாதிப்படைந்த ஊழல்வாதிகளின் கூட்டமே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி; பா.ஜ.க.


பணமதிப்பிழப்பில் பாதிப்படைந்த ஊழல்வாதிகளின் கூட்டமே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி; பா.ஜ.க.
x
தினத்தந்தி 26 Nov 2018 8:03 AM GMT (Updated: 26 Nov 2018 8:03 AM GMT)

பணமதிப்பிழப்பில் பாதிப்படைந்த ஊழல்வாதிகளின் கூட்டமே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என பா.ஜ.க. கூறியுள்ளது.

மதுரா,

உத்தர பிரதேசத்தின் மின்துறை மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வுக்கு அச்சுறுத்தல் அல்ல.  ஊழல், கமிசன் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன.

அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூட்டம்.

அவர்கள் ஏழைகளின் நலனில் அக்கறை அற்றவர்கள்.  பிரதமரால் கொண்டு வரப்பட்ட நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நோக்கினை கொண்டவர்கள் என கூறினார்.

டெல்லியில் வருகிற 30-ந்தேதி விவசாயிகளின் போராட்டம் நடைபெறவுள்ளது.  இதுபற்றி கூறிய அவர், இது அரசியல் சார்ந்த போராட்டம்.  அவர்கள் (காங்கிரசார்) முதலை கண்ணீர் வடித்தது தவிர விவசாயிகளுக்கு வேறெதுவும் செய்யவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியானது விவசாயிகளின் அரசு.  மக்கா சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை 95 சதவீதம் ஆக உயர்த்தியது.

நெல், கோதுமை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மட்டுமின்றி, தானியங்களை கொள்முதல் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியானது கேரளாவில் பசுக்களை கொல்கிறது.  வாக்குகளுக்காக மத்திய பிரதேசத்தில் கோசாலைகளை திறக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Next Story