குண்டு வீசுவதாக பயமுறுத்தியவர்கள் பிச்சையெடுத்து கொண்டு இருக்கிறார்கள் பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தாக்கு


குண்டு வீசுவதாக பயமுறுத்தியவர்கள்  பிச்சையெடுத்து கொண்டு இருக்கிறார்கள் பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 26 Nov 2018 9:38 AM GMT (Updated: 26 Nov 2018 9:38 AM GMT)

நம் மீது குண்டு வீசுவதாக பயமுறுத்தியவர்கள் தற்போது ஒவ்வொரு இடமாக பிச்சையெடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.

அல்வார்

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை குறிப்பிடாமல் பாகிஸ்தானை தாக்கி பேசினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நட்பு நாடுகளிடம்  நிதிஉதவி பெறும் முயற்சியைக் சுட்டிக்காட்டி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

முன்னர் இந்தியா மீது குண்டுவீசுவதாக அச்சுறுத்தியவர்கள்,  எங்கள் தந்திரம் காரணமாக  தற்போது பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். மோடியின் சாதி இதற்கு பின்னால் இல்லை. 125 கோடி இந்தியர்கள் உள்ளனர் என கூறினார்.

ராஜஸ்தானின் பில்வாராவில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். 

அவர் பேசியதாவது:-

மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முயன்ற போது காங்கிரஸ் கட்சி அதிலும் அரசியல் செய்தது. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவே துக்கம் அனுசரித்துக்கொண்டு இருந்த அந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் தேர்தலுக்காக பரப்புரையில் தீவிரமாக இருந்தது.

மும்பை தாக்குதல் நடந்த இந்த நாளில் உலகமே அதிர்ந்தது. அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதத்தில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதையும் சந்தேகித்தது. வீடியோ ஆதாரத்தை கேட்டது என்று தெரிவித்தார்.

Next Story