தேசிய செய்திகள்

மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு + "||" + Huge Fire In Mumbai's Wadala As Tanker Bursts Into Flames After Crash

மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு

மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு
மும்பையில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.
வடலா, 

மும்பையின் வடலா அருகே உள்ள பக்தி பார்க் பகுதியில்,  மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி , மோனோ ரயில் மேம்பால தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி கொழுந்து விட்டு எரிந்தது. கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.

 நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், நிகழ்விடத்திற்கு ஐந்து தீ அணைப்பு வாகனங்கள் வந்தன. பலத்த போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
மும்பையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
2. மும்பை-லண்டனுக்கு முதல் பயணம் ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாட்டம்
மும்பையில் இருந்து லண்டனுக்கு முதல் பயணம் மேற்கொண்ட ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கடல்சார் வார விழா சென்னையில் கொண்டாடப்படுகிறது.
3. மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
4. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துயரம் நடைமேம்பாலம் இடிந்து 5 பயணிகள் பலி 29 பேர் படுகாயம்
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேம்பாலம் இடிந்து 5 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #MumbaiCSTBridgeCollapse