தேசிய செய்திகள்

மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன? + "||" + We will not allow construction of new dam by Karnataka in Mekedatu cauvery management board

மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?

மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு,

காவிரி பிரச்சனையை தீர்க்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்டகாலமாக மேற்கொண்ட சட்டப்போராட்டம் காரணமாக வெற்றி கிடைத்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ‘காவிரி மேலாண்மை ஆணையம்’அமைக்கப்பட்டடது. இப்பிரச்சனை முடிந்த நிலையில் மற்றொரு பிரச்சனை தலையெடுத்துள்ளது. அதாவது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணையை கட்டுவோம் என்று கர்நாடகா மீண்டும் அறிவித்துள்ளது. 

மேகதாது திட்டம் என்ன?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகப்புரா பகுதியில் மேகதாது அமைந்துள்ளது. இங்கு பெரும் பாறைகளுக்கு மத்தில் அருவிகளாக, காவிரி பரந்து விரிந்து பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் மேகதாதுவில்தான் அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரி ஆற்றுட‌ன் சங்கமிக்கின்றன. இங்கு மிகவும் குறுகலான இடம்வழியாகத்தான் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. மேகதாது என்ற கன்னட சொல்லுக்கு தமிழில் ஆடுதாண்டி என்று பொருள்.

இங்கு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணையைக் கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. மேகதாது அணையின் மூலம் 66 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புனல் மின்சார நிலையம் தொடங்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. அணை தொடர்பான திட்டத்தை 2013-ம் ஆண்டு கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. 
மேகதாதுவில் புதிய அணை என்றதும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

சட்டசபையில் பேசுகையில் “காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும்” என்றார். 

சித்தராமையா/ குமாரசாமி நகர்வு 

கடந்த வருடம் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை இத்திட்டத்திற்கு கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியது. 2017 அக்டோபரில் கர்நாடக அரசு திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியகூறுகள் பற்றி அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கியது. கர்நாடக தேர்தல் முடிந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு முதலமைச்சரான குமாரசாமி மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்றார். திங்களன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய குமாரசாமி, திட்டத்தை முன்னெடுக்க உதவுமாறு கோரிக்கையை விடுத்தார்.

மீண்டும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பிவிட்டது. அப்போதும் தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்தது.

இப்போது பிரச்சனையென்ன?

மத்திய நீர்வள ஆணையம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அனுமதியை அளித்துள்ளது. தமிழகம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் தமிழகம் முடிவு செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேகதாது அணையின் முக்கியத்துவத்தை தமிழக அரசுக்கு எடுத்துரைப்பேன் என்றார் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார். 

 காவிரி மேலாண்மை வாரியம் 

காவிரியில் இனி எந்தஒரு திட்டத்தையும் முன்னெடுத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தின் இசைவு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில் காவிரி ஆணையத் தலைவர்  மசூத் ஹுசைன் விளக்கம் அளிக்கையில்,  தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம். காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்: ஆனந்த்சிங்கை தாக்கியதாக கணேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு
ஆனந்த்சிங்கை தாக்கியதாக கணேஷ் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2. அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக திரும்பி வர எடியூரப்பா உத்தரவு
அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக கர்நாடகாவிற்கு திரும்புமாறு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
3. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர் என்று கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
4. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை; மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
5. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு : அமித்ஷா கண்டனம்
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.