தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவு + "||" + 22 per cent turnout till noon as voting progresses across MP

மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவு

மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவு
மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாகுப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 3 தொகுதிகளில் மட்டும்  காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி வி.எல். காந்தாராவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் புகார்கள் வந்த நிலையில், 70 வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சீட்டு தணிக்கை செய்யும் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த வாக்கு பதிவில் பணியில் இருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பினால் உயிரிழந்தனர்.  அவர்களில் ஒருவர் குணா மற்றும் மற்றொருவர் இந்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.  அவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் தேர்தல்; காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்கு பதிவு
வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.
2. நாடாளுமன்ற தேர்தல்; மதியம் 12 மணிவரை வாக்கு பதிவு நிலவரம்
நாடாளுமன்ற தேர்தலில் மதியம் 12 மணிவரையான வாக்கு பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
3. நாடாளுமன்ற தேர்தல்; காலை 9 மணிவரை வாக்கு பதிவு நிலவரம்
நாடாளுமன்ற தேர்தலில் காலை 9 மணிவரையான வாக்கு பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
4. நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது
நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது.
5. 4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவு
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. #LokSabhaElections2019