சட்டசபை தேர்தல்; மிசோரம் 73 %, மத்திய பிரதேசம் 65.5 % வாக்குகள் பதிவு


சட்டசபை தேர்தல்; மிசோரம் 73 %, மத்திய பிரதேசம் 65.5 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 28 Nov 2018 12:56 PM GMT (Updated: 28 Nov 2018 12:56 PM GMT)

மிசோரம் சட்டசபை தேர்தலில் 73 சதவீதமும், மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 65.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

போபால்,

40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டமன்ற தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.  இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.  இந்த வாக்கு பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா கூறியுள்ளார்.  தொடர்ந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை உயர கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல் மந்திரி லால் தன்ஹாவ்லா போட்டியிடும் செர்சிப் தொகுதியில் அதிக அளவாக 81 சதவீத அளவிற்கு வாக்கு பதிவு நடந்துள்ளது.

இதேபோன்று, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 65.5 வாக்குகள் பதிவாகி உள்ளன.  இது முந்தைய வாக்கு பதிவினை விட 7 சதவீதம் குறைவு.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 72.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  வாக்கு பதிவு நடந்த மையங்களில் 1,145 வாக்கு பதிவு இயந்திரங்களும், 1,545 வாக்கு சீட்டு தணிக்கை செய்யும் இயந்திரங்களும், புகாரை தொடர்ந்து மாற்றப்பட்டன என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story