பாகிஸ்தானின் தலைமை உண்மையுடன் பணியாற்றினால் தீவிரவாதத்தினை எதிர்கொள்ளலாம்; ராஜ்நாத் சிங்


பாகிஸ்தானின் தலைமை உண்மையுடன் பணியாற்றினால் தீவிரவாதத்தினை எதிர்கொள்ளலாம்; ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:14 PM GMT (Updated: 28 Nov 2018 3:14 PM GMT)

பாகிஸ்தானின் தலைமை உண்மையுடன் பணியாற்றினால் தீவிரவாதத்தினை எதிர்கொள்ளலாம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

இமாசல பிரதேசத்தின் மாண்டி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்பொழுது, மத்தியில் பா.ஜ.க. அரசில், நாட்டில் நக்சல்வாதம் 90 மாவட்டங்களில் இருந்து 9 மாவட்டங்களாக குறைந்துள்ளது.  இதேபோன்று நாட்டில் தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்களும் 3 முதல் 4 மாவட்டங்களாக குறைந்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு வேகமுடன் வளர்ந்து வருகிறது.  நாட்டில் வங்கிகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார்.  இதனால் கிராமப்புற மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும் என கூறினார்.  ஆனால் அதற்கான பலன் கிடைக்கப்பெறவில்லை.

வங்கி சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்துள்ளது ஆளும் மத்திய அரசு.  இதனால் பொதுமக்களால் 33 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன என அவர் கூறினார்.

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதத்தினை ஊக்குவிக்கிறது.  பாகிஸ்தானின் தலைமை உண்மையுடன் பணியாற்றினால் தீவிரவாதத்தினை எதிர்கொள்ளலாம் என்றும் சிங் கூறியுள்ளார்.

Next Story