தமிழ்நாடு, ஆந்திராவில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு, ஆந்திராவில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 11:52 PM GMT (Updated: 28 Nov 2018 11:52 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது.

புதுடெல்லி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story