திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு


திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 1:23 PM GMT (Updated: 29 Nov 2018 1:23 PM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜாமுரியா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் தாண்டிய ஆதரவு உள்ளது. திரிபுரா மாநிலத்தில் தனக்கென வாக்கு வங்கியை வைத்திருந்தது. இதுபோன்று மேற்கு வங்காளம் எல்லையொட்டிய மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆதரவு உள்ளது.

இதுவரையில் பிற மாநில தேர்தல்களில் அதிக கவனம் அக்கட்சி செலுத்தவில்லை. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவியின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற அண்டைய மாநிலங்களிலும் எங்களுடைய கட்சி போட்டியிடும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும். அசாம் மற்றும் ஒடிசாவிலும் எங்களுடைய கட்சி களமிறங்கும்  என அறிவித்துள்ளார். 

ஜார்க்கண்டில் பா.ஜனதா பழங்குடியின மக்களை தாக்குகிறது, நிலம் கையகப்படுத்தப்படுகிறது என குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, பழங்குடியினருக்காக போராட எங்களுடைய குழுவை அனுப்பியுள்ளோம், எங்களுடைய போராட்டம் தொடரும். அசாமிலும் பா.ஜனதவிற்கு எதிராக களமிறங்குவோம் என கூறியுள்ளார். 

Next Story