தேசிய செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்பட சர்ச்சை “ஒவ்வொரு நாளும் ஆயிரம் புகைப்படம் எடுக்கப்பட்டது” சித்து பதில் + "||" + 1000 Photos Were Clicked Every Day Dont Know Chawla Sidhu on Picture With Pro Khalistan Leader

காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்பட சர்ச்சை “ஒவ்வொரு நாளும் ஆயிரம் புகைப்படம் எடுக்கப்பட்டது” சித்து பதில்

காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்பட சர்ச்சை “ஒவ்வொரு நாளும் ஆயிரம் புகைப்படம் எடுக்கப்பட்டது” சித்து பதில்
காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் வெளியான சர்ச்சைக்கு சித்து பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இருதரப்பிலும் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தான் தரப்பு நிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் கலந்து கொண்டார். அங்கு காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் சித்துவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. பா.ஜனதா மற்றும் அகாலிதளம் கட்சிகள் சித்துவை கடுமையாக விமர்சித்தன. அடிக்கல் நாட்டு விழாவில் இம்ரான் கான், சித்துவை புகழ்ந்தது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் இந்த புதிய சர்ச்சையும் வெளியாகியது.

 “பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் எனவும் பா.ஜனதா அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் வெளியான சர்ச்சைக்கு சித்து பதிலளித்துள்ளார். 

 “பாகிஸ்தானில் அதிகமான அன்பு காட்டப்பட்டது. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்பட்டது. அப்படி புகைப்படம் எடுத்தவர்களில் சாவ்லா அல்லது சீமாயென யாரும் எனக்கு தெரியாது,” என பதிலளித்து உள்ளார் சித்து.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா
ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் என அமித்ஷா பேசியுள்ளார்.
2. குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணியிலிருந்து விலகுவோம் பா.ஜனதாவுக்கு என்பிபி எச்சரிக்கை
மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என பா.ஜனதாவுக்கு என்பிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ரபேல் விவகாரம்: ராகுல் பன்னாட்டு நிறுவனங்கள் நலனுக்காகவே குரல் கொடுக்கிறார் - பா.ஜனதா தாக்கு
ரபேல் விவகாரத்தில் ராகுல் பன்னாட்டு நிறுவனங்கள் நலனுக்காகவே குரல் கொடுக்கிறார் என பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.
4. பா.ஜனதா அரசு நேர்மையானது மற்றும் ஏழைகளுக்கானது என்று அறியப்படுகிறது - பிரதமர் மோடி
எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்குதான் வாக்களிப்பார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
5. மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - அமித் ஷா
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்ஷா பேசியுள்ளார்.