இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி,
பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி படுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
எச்சரிக்கையின்படி நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும்.
Related Tags :
Next Story