பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் எங்களுடைய உதவியை கேளுங்கள் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ்!


பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் எங்களுடைய உதவியை கேளுங்கள் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ்!
x
தினத்தந்தி 2 Dec 2018 4:18 PM IST (Updated: 2 Dec 2018 4:18 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் எங்களுடைய உதவியை கேளுங்கள் என்று பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

புதுடெல்லி,

எல்லைத் தாண்டிய பங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டு கிடக்கிறது. பாகிஸ்தானில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னர் இம்ரான் கான் தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேசுவதற்கு தயார் என்று கூறிவருகிறார். இந்தியா எப்போது எல்லாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறதோ அப்போது எல்லாம் எல்லையில் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும். இந்நிலையில் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. இம்ரான் கான் பழைய சம்பவங்களை மறந்துவிட்டு ஒன்றாக செல்வோம் என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் எங்களுடைய உதவியை கேளுங்கள் என்று பாகிஸ்தானுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.  “ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பயங்கரவாதம் மட்டும்தான் பிரச்சினை. பாகிஸ்தான் அதனை ஆலோசிக்கலாம். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா சண்டையிட்டு வருகிறது. அதுபோன்று பாகிஸ்தானில் தனியாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட முடியவில்லை என்றால் இந்தியாவிடம் நேரடியாக உதவியை கோரலாம்,” என கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். 

Next Story