குழந்தை திருமணத்திற்கு தடையில்லை பா.ஜனதா வேட்பாளர் சர்ச்சைக்குரிய வாக்குறுதி; தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


குழந்தை திருமணத்திற்கு தடையில்லை பா.ஜனதா வேட்பாளர் சர்ச்சைக்குரிய வாக்குறுதி; தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 2 Dec 2018 12:17 PM GMT (Updated: 2 Dec 2018 12:17 PM GMT)

குழந்தை திருமணத்திற்கு தடையில்லை என்று வாக்குறுதியளித்த பா.ஜனதா வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 7–ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தீவிரமாக இறங்கியுள்ளது.  தேர்தலில் பாலி மாவட்டத்துக்கு உட்பட்ட சோஜத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பெண் வேட்பாளர் சோபா சவுகான்  போட்டியிடுகிறார். தொகுதியில் சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குழந்தை திருமணத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். குழந்தை திருமணம் விவகாரத்தில் போலீசின் தலையீடு இருக்காது என வாக்குறுதியளித்துள்ளார். எம்.எல்.ஏ. ஆனால் ஒருபோதும் குழந்தை திருமணத்துக்கு தடையை ஏற்படுத்த மாட்டேன் என அவர் மக்களுக்கு உறுதி அளித்ததாக தெரிகிறது.

அவருடைய இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சு அடங்கிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சோபா சவுகானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


Next Story