இந்தி மொழி அழகான மொழி தான் அதை தேசிய மொழி என்று கூறுவது தவறு - ராஜ் தாக்கரே
இந்தி மொழி அழகான மொழி தான் அதை தேசிய மொழி என்று கூறுவது தவறு என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்தாக்கரே பேசியதாவது:
இந்தி மொழி அழகான மொழி தான், ஆனால் அதை தேசிய மொழி என்று கூறுவது தவறு. இந்தியை போன்று தமிழ், மராத்தி, குஜராத்தி என பிற மொழிகளும் இந்த நாட்டின் மொழிகள் தான்.
மராட்டிய மாநிலத்தில் அம்மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது? உத்தரபிரதேசத்தில் நாளை ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அம்மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பீகாரிலும் இதுதான் நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story