தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி + "||" + A car crash from Chennai - Five members of the same family were killed

சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
சென்னையில் இருந்து சென்ற காரும், லாரியும் ஆந்திராவில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஸ்ரீகாளஹஸ்தி,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிந்தகொம்மதின்னா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரம் (வயது 36). குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கங்காதரத்தை அவருடைய குடும்பத்தினர் வரவேற்க சென்றிருந்தனர். பின்னர் அவருடன் காரில் தங்கள் கிராமத்துக்கு புறப்பட்டனர்.

அவர்களது கார் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் மாமண்டூர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே கடப்பாவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியும், இவர்கள் சென்ற காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயத்துடன் துடித்தனர். விபத்தால், அங்கு கடும் போக்குவரத்துப்பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் காரில் பயணம் செய்த கங்காதரம், அவருடைய மனைவி விஜயம்மா (30), கங்காதரத்தின் தம்பி பிரசன்னா (32), அவருடைய மனைவி மாரியம்மாள் (25), இவர்களின் 2 வயது மகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களை பிணமாகத்தான் போலீசாரால் மீட்க முடிந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்
சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளது.
3. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. சென்னை நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்
கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்.