உத்தரபிரதேசத்தில் வன்முறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை. துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
லக்னோ
உத்தரபிரதேசத்தில் புலந்த்சார் மாவட்டத்தில் சினாய் கோட்வாலி சிங்ராவதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் இறைச்சி கூடத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக எழுந்த விவகாரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார்.
சுமித் என்ற வாலிபர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார். மீரட்டில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித் பலியாகி உள்ளார். இவர் நண்பரை கொண்டு விடுவதற்காக சென்றவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார்.
Related Tags :
Next Story