சொத்துக் குவிப்பு வழக்கு: டெல்லி மந்திரி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை


சொத்துக் குவிப்பு வழக்கு: டெல்லி மந்திரி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 4 Dec 2018 12:00 AM IST (Updated: 3 Dec 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

சொத்துக் குவிப்பு வழக்கில், டெல்லி மந்திரி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடிக்கு சொத்து சேர்த்ததாக டெல்லி மாநில மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின், அவருடைய மனைவி பூனம் மற்றும் சில நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சத்யேந்திர குமார் ஜெயின் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது.


Next Story