‘பொது இடத்தில் அழுக்கு துணியை துவைக்க விரும்பவில்லை’ - அமரிந்தர் சிங் மீது சித்து விமர்சனம்


‘பொது இடத்தில் அழுக்கு துணியை துவைக்க விரும்பவில்லை’ - அமரிந்தர் சிங் மீது சித்து விமர்சனம்
x
தினத்தந்தி 4 Dec 2018 2:30 AM IST (Updated: 4 Dec 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கை அவமதிக்கும் வகையில் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து பேசி வருகிறார்.

புதுடெல்லி,

ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தானுக்கு அவர் சென்று வந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “எனது தலைவர் ராகுல் காந்தி. அவர்தான் என்னை எங்கும் அனுப்புகிறார். எங்கள் தலைவருக்கும் தலைவர் ராகுல் காந்தி” என்று குறிப்பிட்டார்.

முதல்-மந்திரியை அவமதிக்கிற வகையில், அவர் இப்படி கருத்து தெரிவித்ததை சக மந்திரிகள் திருப்த் ராஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மீத் சிங் சோதி ஆகியோர் கண்டித்ததுடன், அவர் பதவி விலக வேண்டும் என குரல் கொடுத்தனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்து வருகிற சித்துவிடம் இவ்விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “கேப்டன் அமரிந்தர் சிங் என் அப்பா மாதிரி மனிதர். நான் அவரை நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் அழுக்கு துணியை பொது இடத்தில் துவைக்க விரும்பவில்லை. என் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என கூறினார்.


Next Story