மும்பை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
மும்பை வடமேற்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீ அணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
மும்பை,
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கோரேகாவ்கான் பகுதியில் அரே காலனி உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீ, காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவியது.
தீ விபத்து குறித்து தகவலறிந்த வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் பல மணிநேரமாக போராடினர். மலைப்பகுதியில் இருந்து வீசிய காற்று காசு காரணமாக தீயை அணைப்பது தீ அணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலான பணியாக இருந்தது.
இந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீ அணைப்புத்துறையினர் தெரிவித்தனர். தற்போது வரை கிடைத்த தகவலின் படி, அப்பகுதியில் வசித்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Related Tags :
Next Story