உலகில் பெரிய நாக்கு: நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்


உலகில் பெரிய நாக்கு:  நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:56 AM IST (Updated: 4 Dec 2018 11:56 AM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய நாக்கை வைத்து மூக்கை தான் தொடுவதற்கு முயற்சி செய்வார்கள்.  அதில் ஒரு சிலர் செய்து காட்டுவர், பலர் அதை செய்ய முடியாமலே விட்டுவிடுவர். இந்நிலையில் இதை எல்லாம் மிஞ்சும் வகையில், நீளமான நாக்கை கொண்டு தன்னுடைய நெற்றியை தொட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒருவர்.

நேபாளத்தைச் சேர்ந்தவர் யாகிய பகதூர் கதுவல். 35 வயதான இவர் தான் இந்த ஆச்சரியத்தை செய்துள்ளார். உலகில் முதல்முறையாக ஒருவர் நாக்கை வைத்து நெற்றியை தொடுவது இப்போது தான் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், நான் முதலில் என்னுடைய உதடுகளால் மூக்கை மூடி, அதன் பின் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடுவேன். 

ஒரு வேலை நான்  பேய் போல் நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தால், நான் மேக் அப் எதுவும் போடத் தேவையில்லை, என்னை பார்த்தாலே மக்கள் பயந்து விடுவார்கள் என்று கூறுகிறார். 

மேலும் இவருக்கு வாயில் ஒரே ஒரு பல் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தயவு செய்து இவர் செய்வதை போன்று யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவைக் கண்ட பலரும் அவரை பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.



Next Story