டெல்லியில் டிசம்பர் 10ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
டெல்லியில் டிசம்பர் 10ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுடெல்லி,
சட்டீஸ்கார், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய சட்டசபைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டசபைகளுக்கான தேர்தல் வருகிற 7ந்தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரசார பணிகளில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் வருகிற 11ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அதற்கு முன் டெல்லியில் வரும் 10ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story