நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் நாளை மலர் அஞ்சலி


நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் நாளை மலர் அஞ்சலி
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வியாழக்கிழமை) மலர் தூவி மரியாதை செய்கிறார்.

புதுடெல்லி,

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.

நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரி கள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.



Next Story