தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைப்பார்; நாங்கள் இணையபோவதில்லை: ஓவைசி


தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைப்பார்; நாங்கள் இணையபோவதில்லை:  ஓவைசி
x
தினத்தந்தி 5 Dec 2018 9:43 AM GMT (Updated: 5 Dec 2018 9:43 AM GMT)

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும் அதில் இணைய போவதில்லை என்றும் ஓவைசி கூறியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.) தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த நிலையில் வருகிற 7ந்தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன.  இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தெலுங்கானா மக்கள், கே.சி.ஆர். வெற்றி பெற வாக்களித்திடுவர் என நான் அதிக உறுதியுடன் கூறுகிறேன்.  அவர் அரசு அமைத்திடுவார்.  நாங்கள் அவரது அரசில் இணையபோவதில்லை என்று கூறினார்.

எங்களது கட்சிக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் அமித் ஷா இணைந்து பணியாற்றுகின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் 7 தொகுதிகளை கைப்பற்றிய அக்கட்சி இந்த முறை 8 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது.

Next Story