தேசிய செய்திகள்

நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று பார்ப்போம்! சோனியா-ராகுலுக்கு மோடி சவால் + "||" + Now will see how you escape PM to Rahul Sonia on tax case reopening

நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று பார்ப்போம்! சோனியா-ராகுலுக்கு மோடி சவால்

நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று பார்ப்போம்! சோனியா-ராகுலுக்கு மோடி சவால்
ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரின் வருமான வரிக் கணக்கை மறுமதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டி நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று பார்ப்போம் என மோடி சவால் விட்டு உள்ளார்.
பாலி,

ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெற உள்ளது.  இன்று தேர்தல் பிரசாரத்திற்கு கடைசி நாளாகும். இதை முன்னிட்டு  தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பாலி மாவட்டத்தில்  சுமேர்ப்பூர் என்னுமிடத்தில் நடந்த  பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த எழுபது ஆண்டுகளில் மக்களின் நன்மைக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை முதலில் கூறட்டும். அதன் பின் நாலரை ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது என வினா எழுப்பட்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தன் கட்சியில் உள்ள தலைவர்களின் பெயர்களே தெரியாது. காங்கிரஸின் மிக பிரபலமான விவசாயி மற்றும் ஜாதித் தலைவரான கும்பராம் ஜி என்ற பெயரை அவர் அறியவில்லை. அவர் பெயர் கும்பகர்ணன்  என்று அழைத்தார். அதிகாரத்தில் இருக்கும் போது என்ன செய்வார்  என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.

ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரின் வருமான வரிக் கணக்கை மறுமதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

இப்போது நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று பார்ப்போம் ... ஒரு 'சாயா வாலா' தைரியத்தை பாருங்கள். இந்த நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆண்டவர்கள் நீதிமன்றத்தின் கதவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல்  யார் யாருக்குப் பங்குள்ளது என்கிற உண்மையைச் சொல்லி விடுவார் என்றும் மோடி தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...