தேசிய செய்திகள்

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை + "||" + Now get your PAN card in just 4 hours

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை
பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா  கூறியதாவது:-

வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரிகளை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரித் தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தானியங்கி மயமாக்கல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

வருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பங்களும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும். 2018- 19 ஆம் நிதியாண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.