தேசிய செய்திகள்

புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி + "||" + Rangers baffled as jumbo in 'Catch Tiger' operation flees into forest

புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி

புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி
மைசூரு வன பகுதியில் புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
பெங்களூரு,

கர்நாடகாவின் மைசூரு நகரில் அந்தரசாந்தி கிராமம் அருகே புலி ஒன்று சுற்றியுள்ளது.  இது அங்கிருந்த கால்நடைகளை கொன்று வந்துள்ளது.  இதனால் அதனை பிடிக்க வன துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் 4 யானைகளை தயார் செய்துள்ளனர்.  இவற்றில் மைசூரு தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் அர்ஜுன் மற்றும் அசோகா ஆகிய இரு ஆண் யானைகளும் இருந்தன.

இந்த நிலையில், புலி இருக்கும் இடத்தினை அறிய பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  இந்த சத்தம் கேட்டு அசோகா யானை மிரண்டு ஓடியுள்ளது.  இதனால் அதன் மீது அமர்ந்து இருந்த பாகன் கீழே விழுந்துள்ளார்.  அதன்பின் யானை அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடி விட்டது.

இதனை கண்ட வன துறை அதிகாரிகள் திகைத்து விட்டனர்.  அவர்கள் புலியை பிடிப்பதற்கு பதிலாக தப்பியோடிய யானையை தேடி சென்றுள்ளனர்.

ஆண் யானைகள் மதம் பிடிக்கும் காலங்களில் அவற்றின் உடலில் இனப்பெருக்க சுரப்பிகளில் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.  அந்த யானை மிக ஆக்ரோச நிலையில் இருக்கும்.

இந்த நிலையில் இதுபற்றி கூறிய வன காவலர் நாராயணசாமி, யானைக்கு மதம் பிடித்து உள்ளது.  அதனால் யானை காட்டுக்குள் தப்பியோடி விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
2. வாரச்சந்தை பூட்டை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு
மானாமதுரை வாரச்சந்தையின் பூட்டை அதிகாரிகள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர்
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகாரிகள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
4. உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தில் மழை தொடர்புடைய சம்பவங்களில் இதுவரை 154 பேர் பலியாகி உள்ளனர்.
5. தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் கைப்பட எழுதி தந்த அதிகாரிகள்; பாகிஸ்தானில் சர்ச்சை
பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகளை விதிகளின்படி படிவம் 45ல் வெளியிடுவதற்கு பதிலாக வெற்று காகிதத்தில் எழுதி தந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.