தேசிய செய்திகள்

2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல் + "||" + 2 officers of the conflict was a mockery of the CPI - In the Supreme Court, the Central Government Information

2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்

2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்
2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டனர். இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த நிலையில் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-

சி.பி.ஐ.யில் முதல் 2 பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் வெளிப்படையாக சண்டையிட்டுக்கொள்வது, சி.பி.ஐ.யின் மதிப்பை சீர்குலைப்பதுபோல் அமைந்துள்ளது. இவர்களின் மோதல் நாட்டின் தலையாய அமைப்பின் ஒற்றுமையை கீழே இழுத்து தள்ளுவது போலவும் உள்ளது.

அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக மோதிக்கொண்டது சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது.

இவர்கள் 2 பேரும் சண்டையிட்டுக்கொள்வது முன் எப்போதும் இல்லாத மற்றும் அசாதாரண சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு திகைப்புடன் கண்காணித்து வருகிறது.

இவர்கள் பூனைகள், ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்வது போல் சண்டையிடுகின்றனர். எனவேதான் மத்திய அரசு இதில் கட்டாய நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. மத்திய அரசு தனது வரம்புக்கு உட்பட்டே இந்த விவகாரத்தில் நடவடிக்கையும் எடுத்தது.

மத்திய அரசு மட்டும் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், இந்த அதிகாரிகளின் சண்டை எங்கே போய் முடிந்திருக்குமோ என்று தெரியவில்லை. அது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது
மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டார்.