விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது - பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்


விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது - பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:55 AM GMT (Updated: 6 Dec 2018 11:55 AM GMT)

விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தரமான தீர்வாகாது என பா.ஜனதா விவசாயத்துறை தலைவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கையான பேரழிவுகள், விளைப்பொருட்களுக்கு போதிய விலையின்மை, கூலி மற்றும் ஈடுப்பொருட்களுக்கான விலை உயர்வு காரணமாக விவசாயிகள் கடினமான நிலையை எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராடி வருகிறார்கள். மத்திய அரசு இவ்விவகாரத்தில் இணங்க மறுக்கிறது, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கிறது.

இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தரமான தீர்வாகாது என பா.ஜனதா விவசாயத்துறை தலைவர் கூறியுள்ளார். 

விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் பா.ஜனதா விவசாயத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜனதா விவசாயப்பிரிவு தலைவர் விரேந்திர சிங் மாஸ்த் பேசுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வேன். கடந்த வாரம் பேரணியில் கலந்துக் கொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளுக்கு கோரிக்கையை விடுத்துள்ளேன். அவர்களுடன் ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க நடவடிக்கையை மேற்கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசிடம் கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார். 

மத்திய பா.ஜனதா அரசு விவசாயிகள் மற்றும் விவசாயத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது என கூறிய விரேந்திர சிங், விவசாயிகள் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story