தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேனில் கொண்டு சென்ற ரூ.3.50 கோடி பணம் பறிமுதல்


தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேனில் கொண்டு சென்ற ரூ.3.50 கோடி பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:10 PM GMT (Updated: 6 Dec 2018 3:10 PM GMT)

தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வேனில் கொண்டு சென்ற ரூ.3.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாரதீய ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.  அங்கு 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மல்காஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆட்சியை தொடர்வதற்கும், காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணியும், பாரதீய ஜனதாவும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டியில் உள்ளன.

119 இடங்களை கொண்டுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணிக்கு ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவெளி இன்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

இந்த நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக அவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணத்தினை சில அரசியல் தலைவர்களிடம் கொடுப்பதற்காக வேன் ஒன்றில் தேவையான அளவிற்கு பணம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.  இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் வாராங்கல் நகரில் வேனை வழிமறித்து சோதனையிட்டனர்.  இதில் வேனில் இருந்த ரூ.3.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

தொடர்ந்து வேனில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் நடந்த விசாரணையில் அவரது பெயர் எப். ரெட்டி என்பது தெரிந்தது.  இவர் வரதண்ணபேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு தெரிந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story