தேசிய செய்திகள்

4 வருட காத்திருப்புக்கு பின் தலைப்பாகை அணியும் நம்பிக்கையில் சச்சின் பைலட் + "||" + After four-year wait, Pilot hopeful of wearing 'safa' again

4 வருட காத்திருப்புக்கு பின் தலைப்பாகை அணியும் நம்பிக்கையில் சச்சின் பைலட்

4 வருட காத்திருப்புக்கு பின் தலைப்பாகை அணியும் நம்பிக்கையில் சச்சின் பைலட்
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் 4 வருட காத்திருப்புக்கு பின் பாரம்பரிய தலைப்பாகையை அணியும் நம்பிக்கையில் உள்ளார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது.  இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் தலைப்பாகையை அணிவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

கலாசாரத்தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப்பாகையை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னரே அணிவேன் என்று அவர் உறுதி எடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் பல்வேறு தருணங்களில் மக்கள் எனக்கு தலைப்பாகைகளை பரிசாக அளித்தனர்.  அவற்றை அணிவதற்கு பதிலாக, முன்நெற்றியில் தொட்டு விட்டு கீழே வைத்து விடுவேன்.

இந்த தேர்தலில் மக்களின் ஆசியால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.  மீண்டும் நான் தலைப்பாகையை அணிய முடியும் என முழு நம்பிக்கையுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் அதிகமுள்ள டோங்க் தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சச்சின் பைலட்டுக்கு தலைப்பாகையை அணியும் வாய்ப்பு பற்றி டிசம்பர் 11ந்தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எச்.வசந்தகுமார் நம்பிக்கை
கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
2. பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
3. இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும்; சீனா நம்பிக்கை
நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில் அங்கு அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.